அனைவருக்கம் சௌந்தரின் இனிய வணக்கம்,
அண்ணன் நகைச்சுவை மன்னன் வைகைபுயல் வடிவேலு சொன்னது மாதிரி சும்மா இருக்கறதுனா அவ்வளவு எளிது கிடையாது போல. இறுதியா சும்மா இருந்து சோர்வடைந்து இந்த இலங்காவி பயணம் மூலம் என்னோட சோம்பேறி விரதத்தை முடிக்கலாம்னு இருக்கேன்(அதாவது நானும் ஏதாவது எழுதலாம்னு முடிவு பண்ணினா என்னோட இந்த சோம்பேறி நண்பன் என்னைவிட்டு போகமாட்டேனு சொல்லி இறுதியா இப்ப சரி பொழச்சு போனு விட்டுட்டாரு). சரி அத விடுங்க நானும் இந்த வலை பதிவு மூலம் உங்கள் அனைவரோடும் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னொன்று இதுதான் என்னோட முதல் பதிவு அதனால் மொக்கையா இருந்தா மன்னிச்சுக்கோங்க.
நானும் என்னோட நண்பர்களும் பல மாதமா இந்தா போவோம், இங்க போவோம், அங்க போவோம்னு சொல்லி தள்ளி வைத்திருந்த சுற்றலா பயணம் என் நண்பன் செல்வாவோட திருமணநாள்ல ஒரு முடிவுக்கு வந்து, என் குடும்பம்(நானும், என் மனைவி கௌரி), செல்வா குடும்பம்(செல்வா, செல்வா மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவர்கள் குழந்தை ஜீவிகா) மற்றும் தினேஷ் குடும்பம்(தினேஷ், தினேஷ் மனைவி கனகதாரா மற்றும் அவர்கள் குழந்தை காவியா ) மூன்று குடும்பமும் இலங்காவி போறதா முடிவு பண்ணி அன்றைக்கே விமான பயனசீட்டிற்கு முன்பதிவு செய்தோம். ஏனா முதல யாராவது முன்பதிவு செய்தாதான் மிச்ச நண்பர்களும் வருவாங்க. அப்புறம் அப்படி இப்படீன்னு கடைசியா பாலா குடும்பம்(பாலா, பாலா மனைவி கவிதா மற்றும் அவர்கள் குழந்தை ஜனஸ்ரீ) எங்களோடு இந்த பயணத்துக்கு கலந்துக்கிட்டாங்க. சரி போலாம்னு முடிவு பண்ணிட்டா சரியான திட்டம் போடணும் பாருங்க. அதனால பார்க்கிற அனைவரிடமும் நீங்க இலங்காவி போயிருக்கீங்களா இதான் என்னோட கேள்வியா இருந்தது. அப்புறமா அனைவரிடம் கேட்டதை வைத்தும், இணையத்திலும் இலங்காவிய பத்தி கொஞ்சம் தெருஞ்சுகிட்டு இறுதியா அசெனியா ரெசொர்ட் (Aseania Resort Langkawi) தங்கும் விடுதியில அனைவருக்கும் தங்கும் அறை முன்பதிவு செய்தோம். ஏனா இதுதான் அனைத்து சுற்றுலாபகுதிக்கும் அருகில் இருந்தது அப்புறம் நம் இந்திய உணவு கிடைக்கும் இடமாகவும் அறியப்பட்டதால்(இத நாங்க அங்க போனதுக்கு அப்புறம் நன்றாகவே உணர்ந்தோம்).
இறுதியா 4 இரவு 3 பகல் திட்டத்தோட ஜூலை 26, 2012 அன்று சிங்கையில் இருந்து கோலாலம்பூர் சென்று அங்கிருந்து இலங்காவி சென்றடைந்தோம். ஏனா சிங்கையில் இருந்து இலங்காவிக்கு காலை 10:30க்கு தான் விமானசேவை இருந்தது அதனால தேவை இல்லாம ஒருநாள் வீணாகும்(எப்படி எல்லாம் திட்டம் போட்ருக்கோம் பாருங்க).
தினேஷ், தினேஷ் மனைவி கனகதாரா மற்றும் அவர்கள் குழந்தை காவியா
செல்வா, செல்வா மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவர்கள் குழந்தை ஜீவிகா சிங்கை விமான நிலையத்தில் இருந்து.
விமானத்தில் இருந்து மலேசியா பனை(Palm) தோட்டங்கள். உலகின் பனை எண்ணெய் (Palm oil) உற்பத்தியில் மலேசியா இரண்டாம் இடத்தில் உள்ளது(இந்தோனேசியா முதல் இடந்திலும், நைஜீரியா மூன்றாம் இடத்திலும் உள்ளது)
நாங்கள் கோலாலம்பூர் விமான நிலையம் சென்ற பொழுது மாலை 6 :30 ஆனது அது ஒரு அருமையான மாலை பொழுது.
கோலாலம்பூர் விமானநிலையத்தின் மாலைநேர அழகிய தோற்றம்.
ஐஸ்வர்யா, கனகதாரா, கவிதா, கௌரி மற்றும் ஜனா (இடம் இருந்து வலம்)
இந்த கோலாலம்பூர் விமான நிலையத்தை பார்த்தால் நம்ம சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்தான் ஞாபகத்திற்கு வந்தது. அவ்வளவு மக்கள் கூட்டம் எல்லாம் உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளால் நிரந்து வழிந்தது. இந்த பெருமை அனைத்தும் ஏர் ஆசியா(Air Asia) நிருவனத்திர்க்கே சேரும். ஏனென்றால் இவ்வளவு மலிவாக உலகில் விமான சேவை யாராலும் கொடுக்க முடியாது அதுபோல இங்கிருந்து தென்கிழக்கு ஆசியா அனைத்திற்கும் விமான சேவை உள்ளது.இதில் இந்தியர்களான நமக்கு ஒரு பெருமை என்னவென்றால் ஏர் ஆசியாவின் தலைவர் ஒரு இந்தியர் பெயர் தான் ஸ்ரீ அந்தோணி பிரான்சிஸ் பெர்னாண்டஸ்(Tan Sri Anthony Francis Fernandes) இவரின் தந்தை கோவாவை சேர்ந்தவர். இப்படி ஒரு சிறந்த விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஒரு தொல்லை என்னவென்றால் விமானத்தில் இருந்து இறங்கினால் சுமார் 1 கி.மீ நடந்தால்தான் குடிபுகுதல்(immigration) அறையை அடையமுடியும்.ஆனால் இந்த முறை நாங்கள் டைகர் ஏர்வேஸ்சில்(Tiger Airways) போனதால் நடையில் இருந்து சிறிது தப்பினோம். ஏனென்றால் டைகர் ஏர்வேஸ் குடிபுகுதல்(immigration) அறைக்கு அருகிலேயே நின்றது. இன்னொன்று என்னவென்றால் நாங்கள் திரும்பவும் அடுத்த விமானத்திற்கு 8 :30குள் இரவு உணவை முடித்துவிட்டு செல்லவேண்டும். இங்கிருந்து ஏர் ஆசியா மூலம் நாங்கள் இலங்காவிக்கு முன்பதிவு செய்திருந்தோம். எப்படியோ சரியான நேரத்திற்குள் புறப்பாட்டு அறையை அடைந்தோம்.
விமானம் சரியாக இரவு 9 :20 கிளம்பியது சரியாக இரவு 10 :30 க்கு ஒருவழியாக இலங்காவியை அடைந்தோம். பிறகு நாங்கள் விமானநிலையத்தில் இருந்து ஒரு மகிழுந்து(taxi) மூலம் விடுதிக்கு சென்றோம் பிறகு நேரமின்மை காரணத்தால் இரவு உணவை கோலாலும்பூரில் சரியாக சாப்பிடமுடியாத காரணத்தினால் சரியாக இரவு 11 :00 மணிக்கு விடுதியில் இருந்து கிளம்பினோம். இங்கு தான் நாங்கள் எடுத்த விடுதியின் வசதி புரிந்தது அங்கிருந்து நடக்கும் தூரத்தில்தான் டொமாட்டோ(Nasi Kandar Tomato) உணவகம்(இந்திய இஸ்லாமிய வகை) உள்ளது. நாங்கள் சென்ற நேரத்திற்கும் மிக அருமையான உணவு கிடைத்தது.
இங்கு இம்ரான்னு ஒரு நண்பர் கிடைத்தார் அவரிடம் நாங்கள் எங்கள் திட்டத்தை சொல்லி எப்படி செயல்படுத்துவது என்று கேட்டோம்(நல்ல வேலை இவரிடம் கேட்டோம் ஏனென்றால் நாங்கள் சென்றது இரமலான் மாதமானதால் வெள்ளிகிழமை மதியத்திற்கு மேல் பலரும் படகு செலுத்த விரும்புவதில்லை). பிறகு எங்கள் திட்டத்தை பின்வருமாறு மாற்றியமைத்தோம்
டொமாட்டோ(Nasi Kandar Tomato) உணவகம்
இங்கு இம்ரான்னு ஒரு நண்பர் கிடைத்தார் அவரிடம் நாங்கள் எங்கள் திட்டத்தை சொல்லி எப்படி செயல்படுத்துவது என்று கேட்டோம்(நல்ல வேலை இவரிடம் கேட்டோம் ஏனென்றால் நாங்கள் சென்றது இரமலான் மாதமானதால் வெள்ளிகிழமை மதியத்திற்கு மேல் பலரும் படகு செலுத்த விரும்புவதில்லை). பிறகு எங்கள் திட்டத்தை பின்வருமாறு மாற்றியமைத்தோம்
வெள்ளிகிழமை
---------------------------
காலை:
தீவுப்பயணம் (island hopping )
மாலை:
பண்ட்டாய் தேங்கா கடற்கரை(pantai tengah beach)
சனிக்கிழமை
------------------
காலை:
தொங்கு இரதப்பயணம்(cable car)
ஓரியண்டல் கிராமம்(Oriental Village)
மாலை:
கிலிம் சதுப்புவன காட்டு படகு பயணம்(kilim geoforest park).
கழுகு சதுரம்(Eagle Square, Kuah)
ஞாயிற்றுகிழமை
------------------------
காலை:
பண்ட்டாய் செனாங் கடற்கரை(pantai cenang beach)
மாலை:
நகர்சுற்றல்
திங்கள்கிழமை
---------------------
இலங்காவியில் இருந்து சிங்கை பயணம்
அதுபோல நண்பர் இம்ரான் அடுத்தநாள் படகு பயணதிற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
இலங்காவி வரைபடம்
வெள்ளிகிழமை
---------------------------
அடுத்தநாள் காலை எப்பொழுதும் போல எழுந்து சரி பக்கத்தில் என்ன இருக்குனு பாக்கலாம்ன விடுதிக்கு அருகிலேதான் பண்ட்டாய் தேங்கா கடற்கரை இருந்தது.
நண்பன் பாலா விடுதி நீச்சல் குளத்தருகில்
அசெனியா ரெசொர்ட் வெளித்தோற்றம்
விடுதியில் இருந்து பண்ட்டாய் செனாங் கடற்கரை
விடுதி நீச்சல் குளம்
பிறகு காலை உணவை விடுதியிலேயே முடித்துவிட்டு சிறிது நேரம் விடுதியை சுற்றிக்கொண்டிருந்தோம்.
நம்ம ஊரு இடியாப்பம் மாதிரி இருந்துச்சு சத்தியமா இது பேரு மறந்துடுச்சு ஆனா நல்லா இருந்துச்சு. இதுக்கு தொட்டுக்க நாட்டுச்சக்கர பாகு கொடுத்தாங்க ரொம்ப நல்லா இருந்தது இந்த கலவை.
விடுதி வரவேற்ப்பில் இருந்து நானும் ஏன் மனைவியும்
தீவுப்பயணம் (island hopping )
-----------------------------------------------
பிறகு இம்ரான் சொன்னது போல ஒரு மகிழுந்து வந்து எங்கள் அனைவரையும் தீவுபயணத்திற்கு அழைத்து சென்றார்கள். தீவுபயணம்கிறது மூன்று தீவுகளை 1 .புலாவ் தயாங் புண்டிங்(இந்த தீவை கர்ப்பிணி தீவு(Isle Of The Pregnant Maiden) என்றும் அழைப்பார்கள்), 2 .புலாவ் சிங்கா மற்றும் 3 .புலாவ் பெராஸ் பாசாஹ் கொண்ட ஒரு பயணமாகும். இங்கு புலாவ் என்பது தீவை குறிக்கும் மலாய் சொல்.
-----------------------------------------------
பிறகு இம்ரான் சொன்னது போல ஒரு மகிழுந்து வந்து எங்கள் அனைவரையும் தீவுபயணத்திற்கு அழைத்து சென்றார்கள். தீவுபயணம்கிறது மூன்று தீவுகளை 1 .புலாவ் தயாங் புண்டிங்(இந்த தீவை கர்ப்பிணி தீவு(Isle Of The Pregnant Maiden) என்றும் அழைப்பார்கள்), 2 .புலாவ் சிங்கா மற்றும் 3 .புலாவ் பெராஸ் பாசாஹ் கொண்ட ஒரு பயணமாகும். இங்கு புலாவ் என்பது தீவை குறிக்கும் மலாய் சொல்.
தீவுப்பயணத்துக்கான படகுத்துறை
படகுத்துறையில் இருந்து பாலா, நான், செல்வா, தினேஷ்(இடம் இருந்து வலம்)
படகுத்துறையில் இருந்து புலாவ் தயாங் புண்டிங்கின் அழகிய தோற்றம்
கர்ப்பிணி தீவு
புலாவ் தயாங் புண்டிங் நுழைவு
ஏரிக்கு செல்லும் வழியில் தினேஷ்
புலாவ் தயாங் புண்டிங் தீவில் பார்பதற்கு ஒரு பெரிய ஏறி உள்ளது. இந்த ஏரிக்கு ஒரு அரை கிலோமீட்டர் படகுத்துறையில் இருந்து நடக்க வேண்டும் மிகவும் கடினமான பயணம்னு கூட சொல்லலாம்.
இந்த ஏரியில் நாம் நீச்சல் அடிக்கலாம் தண்ணீர் மிக சுவையாக இருந்தது.
ஏரியின் இரம்மியமான தோற்றம்
அடுத்து நாங்கள் சென்றது புலாவ் சிங்கா. இந்த தீவு கழுகுகள் நிறைந்த ஒரு தீவாகும். இங்கு நாங்கள் படகில் இருந்து இறங்கவில்லை மாறாக படகோட்டி சிறிது ரொட்டி துண்டை கடலில் வீசினார் திடீர் என்று எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை அவ்வளவு கழுகுகள்.
இந்த தீவுபயணத்தின் இறுதியில் புலாவ் பெராஸ் பாசாஹ் தீவிற்கு சென்றோம். இந்த தீவு பவளப்பாறையால் நிறைந்தது. இந்த தீவில் நாம் கடற்குளியில் செய்யலாம் மற்றும் கண்ணாடி அணிந்துகொண்டு பவளப்பாறைகளை ரசிக்கலாம்.
குட்டீஸ்கள் எல்லாம் நல்ல ஆட்டம்
மிக அருமையான தீவு பணத்தை முடித்துக்கொண்டு வந்தா நல்ல பசி எல்லோருக்கும். நாங்க போனது இரமலான் மாதம் பாருங்க டொமாட்டோ உணவகம் இந்த மாதம் மட்டும் மாலை 3 :00யில் இருந்து காலை 6 :00மணி வரை தான் திறப்பாங்களாம். அதனால வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சு இறுதியா மும்பை பேலஸ் உணவகத்துக்கு சென்றோம் சும்மா சொல்லக்கூடாது ரொம்ப குறைவான விலையில் எங்க மதிய உணவை முடித்துக்கொண்டோம்(ஆமா ரொம்ப குறைவு எட்டு பேருக்கு சுமார் 240 மலேசிய வெள்ளி). இப்ப ஒரு புதிய முடிவெடுத்தோம் இனிமேல் சாபிட்டால் டொமாட்டோ இல்லையேல் பட்டினி கிடப்பதென்று பின்ன என்னங்க 3 நாள் உணவுசெலவு ஒரே நாள்ல ஆச்சுனா.மகிழ்ச்சியான தீவுபயணம் ஒரு வழியா சோகத்துல முடிஞ்சு விடுதியில் போய் சிறிது ஒய்வு எடுத்தோம்.
பண்ட்டாய் தேங்கா கடற்கரை(pantai tengah beach)
-----------------------------------------------------------------------------
சிறிது ஒய்வுக்குபின் மாலை பயணத்தை ஆரம்பிச்சோம். திட்டம்போல் பண்ட்டாய் தேங்கா கடற்கரைக்கு சென்றோம் ஏனென்றால் இந்த கடற்க்கரை நாங்கள் இருந்த விடுதிக்கு மிக அருகிலேயே இருந்தது மிகவும் இரம்மியமான மாலை அது.
கடல் சீற்றம் மாலையானதால் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அனைவரும் அந்த கொள்ளை கொள்ளும் அழகை ரசித்துக்கொண்டு இருந்தோம், என் மனைவியோ சிற்பிகள் பொறுக்க ஆரம்பித்துவிட்டாள் அவளுக்கு கைவேலைப்பாடுகள் செய்வது ஒரு பொழுது போக்கு.
அன்று மாலையும் இனிதே முடிந்தது. இப்பொழுது அடுத்த நாள் திட்டத்தை முடிவு செய்தோம் காலை ஓரியண்டல் கிராமத்திற்கு சென்று தொங்கு ரதம் செல்வதென்றும் மதியம் கிலிம் சதுப்புவன காட்டு படகு பயணதிற்கு செல்வதென்றும். எப்படி போவது இப்பொழுது ஒரு முடிவுக்கு வந்து இரு மகிழுந்தை நாங்களே வாடகைக்கு எடுத்தோம்(குறிப்பு: இலங்க்காவியில் மகிழுந்தை வாடகைக்கு எடுத்தால்தான் உங்கள் விருப்பத்திற்கு செல்ல முடியும்). மலேசியாவில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் எண்ணெய் விலை மிகக்குறைவு நம்ம ஊரு விலையில் ரூ 30 .00 தான் அதனால் நன்றாக ஊர் சுற்றலாம்.
சனிக்கிழமை
---------------------
ஓரியண்டல் கிராமம்(Oriental Village) - தொங்கு இரதப்பயணம்(cable car)
---------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------
ஓரியண்டல் கிராமம்(Oriental Village) செல்லும் வழி
ஓரியண்டல் கிராமம்
இலங்காவி என்றாலே இந்த தொங்கு ரதமும் தொங்கு பாலமும் தான் சிறப்புன்னு சொன்னாங்க.
சொன்னது போல தொங்கு ரதம் மிக சிறப்பான பயணம்தான் மேலிருந்து கீழ பார்த்தல் அவ்வளவு இரம்மியமான காடுகள், அருவி சொல்ல வார்த்தைகள் இல்லை.
இந்த தொங்கு ரதம் இரண்டு இடங்களில் நிற்கும் முதல் புள்ளியில் இறங்கினால் அங்கிருந்து தொங்கு பாலத்தையும் அதன் அழகையும் ரசிக்கலாம்.
இதிலிருந்தே தெரியவில்லை இவர் வாத்தியாரின் முரட்டு பக்தரென்று
பிறகு அங்கிருந்து கிளம்பி இரண்டாம் புள்ளியில் இறங்கினால் மொத்த இலங்காவியையும் ரசிக்கலாம். பராமரிப்பு வேலைகள் நடந்ததால் தொங்கு பாலத்தை பார்க்கத்தான் முடிந்தது எங்களால் செல்ல முடியவில்லை(குறிப்பு: இங்கு செல்வதற்கு முன் காலநிலையும் பார்த்து செல்வது அவசியம் இல்லையென்றால் காலநிலை சரியில்லை என்றால் தொங்கு ரதத்தை இயக்கமாட்டார்கள்).
கிலிம் சதுப்புவன காட்டு படகு பயணம்(kilim geoforest park)
-------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------
இந்த இலங்காவி பயணத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பகுதினா அது இந்த கிலிம் சதுப்புவன காட்டு படகு பயணம்தான். இந்த பயணமானது மூன்று பகுதியை கொண்டது
1. கழுகுக்கு இரை கொடுப்பது(Eagle Feeding)
2. முதலை குகை
3. வௌவால் குகை
கிலிம் சதுப்புவன காட்டு படகு பயண படகுத்துறை
சொல்ல வார்தைகள் கிடையாது இதன் அழகை வர்ணிக்க.
சதுப்புவன காடுகளை பற்றி சில தகவல்கள்
----------------------------------------------------------------------
அலையாத்திக் காடு (அல்லது சதுப்புநிலக் காடு, mangrove) என்பது கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர் நீரில் வளரும் மரங்களும் புதர்ச்செடிகளும் உள்ள காடு. இக்காட்டிலுள்ள மரங்கள் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால் இக்காடுகள் அலையாத்திக் காடுகள் எனப்படுகின்றன. நிலமும் கடலும் சேரும் பகுதிகள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும் சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்திக் காடுகள் எனப்படுபவை இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இக்காடுகள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இலங்காவியில் எங்கு நோக்கினும் கழுகுகள்
இந்த சதுப்புவன காட்டில் பயணிக்கும் போது பயணிகள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். மிருகங்களையும் தொந்தரவு செய்யக்கூடாது இருந்தும் எங்கள் அணி அந்த காட்டில் இருந்த குரங்குகளை மதிய உணவு உண்பதன் மூலம் தொந்தரவு கொடுத்தோம் அதில் ஒரு குரங்கு தாவ முயற்சி செய்தது மகவும் அருமை. நல்ல வேலை எங்கள் படகின் வேகத்திற்கு அதால் தாவ முடியவில்லை.
முதலை குகை
முதலை குகைனா முதலை இருக்கும்னு எங்காளுக பலரும் நினைச்சோம், ஆனா உண்மை என்னான்னா அதன் வாயிலின் தோற்றம் இயல்பாகவே முதலை வாய்போல் இருபதாலாம்.கீழுள்ள படத்தில் படகிற்கு வலது புறம் பார்க்கவும்
முதலை குகையை தாண்டியதும் பார்த்தால் நிறைய மீன்பிடிப்படகுகள். இன்னொன்று என்னவென்றால் நீரிலேய கடலுணவகமும் இருந்தது அங்கு உயிருள்ள மீனை நீங்கள் கைநீட்டினால் போதும் அங்கேயே உங்களுக்கு சமைத்து கொடுத்து விடுவார்கள்.
வௌவால் குகை
----------------------------
அதை தாண்டி சென்றால் வௌவால் குகை இங்கு ஒருவருக்கு ௨ மலேசியா வெள்ளி நுழைவுக்கட்டணம். கூடவே நீங்கள் ஒரு கைவிழக்கை வாடகைக்கு எடுத்துசெல்லவேண்டும்
(குறிப்பு: உள்ளே செல்லும் பொழுது யாரும் சத்தமிடக்கூடது).
சதுப்புவன காட்டில் இருந்து கடல் சேரும் இடம்.
இறுதியா படகோட்டி எங்களை ஒரு கடல் உணவகத்துக்கு அழைத்துச்சென்றார் அங்கு இருக்கும் மீன்களை நோட்டம் விட்டுவிட்டு இந்த சதுப்புவன காட்டுபயணத்தை முடித்தோம்.
கழுகு சதுரம்(Eagle Square, Kuah)
--------------------------------------------------
சதுப்புவன காட்டு பயண நினைவிலேயே அன்று மாலை குஅஹ் நகரத்திற்கு சென்றோம். இந்த குஅஹ் நகரம்தான் இந்த தீவின் முக்கிய நகரம். இங்கு உள்ள கழுகு சதுக்கத்தை பார்த்தால் ஒரு உயிருள்ள பிரமாண்ட கழுகுமாதிரியே இருந்தது. அவ்வளவு பிரமாண்டம் மிக நேர்த்தியான கழகு சிலை. இத்தோடு இரண்டாவது நாளும் இனிதே முடிந்தது.
அருகிலேயே ஒரு தோட்டம் இருக்கிறது இருந்தாலும் பார்க்க நேரம் இல்லாத காரணத்தால் வெளியில் இருந்தே ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம் இத்தோடு இரண்டாவது நாளும் இனிதே முடிந்தது.
ஞாயிற்றுகிழமை
----------------------------
பண்ட்டாய் செனாங் கடற்கரை(pantai cenang beach)
-------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
மூன்றாவது நாள் எங்கள் திட்டப்படி காலையில் பண்ட்டாய் செனாங் கடற்கரைக்கு சென்றோம் மிக அருமையான கடற்கரை. இந்த கடற்கரையில் நீர் விளையாட்டு மிகவும் புகழ்பெற்றது. நாங்கள் ஒரு அணியாக இருந்த காரணத்தால் அனைத்து விளையாட்டுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரு விலை பேசினோம்.
அந்த அழகிய கடற்கரையில் அன்று மதியம் வரை விளையாண்டுவிட்டு மதிய உணவு உண்ணும் பொழுது மாலை 3:00 ஆயிடுச்சு இதுவும் எங்களுக்கு ஒரு வசதியா போச்சு ஏனா டொமாட்டோ உணவகம் 3:00 மணிக்குதான் திறக்கும் நாங்கபோக அவங்களும் மதிய உணவை தயாரா வச்சிருந்தாங்க ஒரு புடி புடிச்சிட்டு விடுதிக்கு போனோம்.
நண்பர்கள் அனைவரும் அந்த நீச்சல் குளத்த விட்டுட்டோமேன்னு ஒரு அழுகை அப்புறம் என்ன புள்ள குட்டி அனைவரையும் கூட்டிட்டு போனா வாண்டுகல்லாம் ஒரே ஆடம் அப்புறம் என்னடா நீச்சல் குளத்த முன்னாடியே விட்டுட்டோமேன்னு நாங்களும் ஒரு ஆடம் போட்டுட்டு மாலையில் கடைவீதிக்கு சென்று பொருட்களின் விலையை கேட்டுவிட்டு யப்பா சிங்கபூர்லே இதவிட குறைவா கிடைக்குதுன்னு எதுவும் வாங்காம இரவு உணவ மட்டும் டோமாட்டோல முடிச்சிட்டு போய் கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சிட்டு தூங்கிட்டோம்.
திங்கள் காலை சுற்றுலா வந்த ஞாபகமே இல்லாம சீக்கரம் கெளம்புங்க எல்லோரும் 7:30 குள்ள எல்லாம் விமானநிலையம் போகணும்னு எல்லோரையும் கிளப்பிட்டு சரியான நேரத்துக்கு போயிட்டோம். என்னபண்றது குறஞ்சது 10:30க்காவது அலுவலகத்திற்கு போகனுமே
இலங்காவி விமானநிலையம்
விமானத்தில் இருந்து இலங்காவியின் அருமையான பாலங்கள்
சிங்கை விமான நிலையம்
அப்புறம் என்ன வந்து விமானநிலையத்திலேயே சட்டைய மாத்திட்டு அலுவலகத்துக்கு சென்றுவிட்டேன்.
இதுக்கு மேல எழுதமுடியலிங்க கை கழுத்து எல்லாம் வழிக்குது.

No comments:
Post a Comment